குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வேளாவள்ளி பஞ்சாயத்து காவப்பட்டி கிராமத்தில் 500வீடுகள் உள்ளது 1000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் காவப்பட்டி கிராமத்தில் 5 மினி டேங்க் உள்ளது. இருந்தும் 5மினி டேங்க் பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு  ஒரு மினி டேங்க் மட்டும் செயல்பட்டு வந்துள்ளது சில தினத்திற்கு முன்பு அந்த மினிடேங்க் பழுதடைந்துவிட்டது. இந்த நிலையில் காவப்பட்டி கிராம மக்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள பாலக்கோடு பைபஸ் நெடுஞ்சாலையில் ஒகேனக்கல் குழாய் உள்ளது தினந்தோறும் குடிநீர் அங்கு வந்து எடுத்துச் செல்கின்றன இருப்பினும் போதுமான அளவுக்கு குடிநீரில் கிடைப்பதில்லை ஒரு கிலோ மீட்டர் சென்று குடிநீர் எடுத்து வருவது கிராம மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று நேற்று கிராம மக்கள் 70க்கும் மேற்பட்டோர் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு அக்கிராம மக்கள் தங்கள் ஊருக்கு ஒகேனக்கல் குழாய் வரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டு பழுதடைந்த மினி டேங்க் மோட்டார்களை சரி செய்ய வேண்டும் என்று காவப்பாட்டி ஊர் கவுண்டர் நஞ்சப்பன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி இல்லாததால் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இரண்டு நாட்களில் உங்க ஊருக்கு குடிநீர் வரும்படி ஏற்பாடு செய்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்த பிறகு காவப்பட்டி கிராம மக்கள் திரும்பிச் சென்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..