அரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதி அயன் பாப்பாகுடியில் மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது.எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகிறார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியில் உள்ள வகுப்பறைகளின் தரைத்தளத்தில் விரிசல் ஏற்பட்டு குண்டும் குழியுமாகி சிமென்ட் காரைகள் உடைந்த நிலையில் மாணவர்கள்

வகுப்பறைக்குள் அமர்ந்து பாடம் கற்க பெரிதும் சிரமத்திற்கு ஆளாவதை கண்டுணர்ந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி நாம் தமிழர் கட்சியினரும் பழுதடைந்த வகுப்பறைகளின் தளங்களை அகற்றி புதிய தளம் ₹1,20,000 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. அவ்வகுப்பறைகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் நிகழ்வும்,கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவ,மாணவிகளுக்கு நோட்டு,புத்தகம் வழங்கும் நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் தென்மண்டலச் செயலாளர், பொறியாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..