கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்ற ஜனநாயக வழி போராட்டம் நடத்துவது சம்பந்தமாக அனைத்து சமூக,சமுதாய மக்கள் கலந்து ஆலோசனை செய்யும் கலந்தாய்வு கூட்டத்திற்கு மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை தலைவர் நூருல் ஜமான் அழைப்பு விடுத்து, கீழக்கரையில் இருக்கும் அனைத்து சமூக மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது.

கீழக்கரையில் அனைத்து தீமைகளுக்கும் முத்தாய்பாய் நகரில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற நாம் போராடி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

இது சம்பந்தமாக சமூக மற்றும் சமுதாய ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்,முற்றுகை போராட்டம், பூட்டுபோடும் போராட்டங்கள் வாயிலாகவும் மற்றும் அரசு துறைக்கு மனு வாயிலாகவும், கொண்டு சென்றும் முற்றிலும் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் இந்த இரண்டு மதுபான கடைகளை அகற்றுவதில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.

நமது நகர் நலன் கருதி இந்த இரண்டு மதுபான கடைகளை அகற்ற நாம் அனைவரும் பொதுமக்களை ஒருங்கிணைந்து ஜனநாயக வழி போராட்டம் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இது சம்பந்தமாக ஜனநாயக வழி போராட்டம் நடத்த அனைத்து ஜமாஅத், சமூக,சமுதாய அமைப்புகள்,அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்கும் கலந்தாய்வு கூட்டம் வரும் 21/07/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45மணியளவில் மின் ஹாஜியார் பள்ளி அருகில் கஜினி அவர்கள் டீக்கடைக்கு எதிரே இருக்கும் மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நமது நகர் பொதுமக்கள் நலன் கருதி இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் படி கேட்டு கொள்கிறோம் இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..