திண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்

திண்டுக்கல்லில் நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் நிலுவையில் உள்ள பொதுமக்களின் மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு செய்ய உள்ளார்ண்ட நாட்களாக திண்டுக்கல் கோட்டத்தில் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு காணலாம்

திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு ,ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் நத்தம் வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கூறப்படுகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..