தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா: “பொதுமக்கள் பாதுகாப்புக்காக 200 CCTV கேமரா, ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபடுத்தப்படவுள்ளனர்” – தூத்துக்குடி டவுன் DSP பிரகாஷ் பேட்டி

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரை நடக்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட S.P.அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது, கூட்டத்தில், மாதா கோவில் வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையம் அமைத்தல்,கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், சாலையோர கடைகள் ஒரு புறம் மட்டும் அமைத்தல், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, அவற்றை புறக்காவல் நிலையத்தில் உள்ள ஒளித்திரை மூலம் கண்காணித்தல், ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதுபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய DSP பிரகாஷ் “மாதா கோவில் திருவிழாவிற்கு வந்து செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக நகரின் வடக்கு பகுதியிலிருந்து வருபவர்களுக்கு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திட -முத்துநகர் பீச் வளாகமும், இரு சக்கர வாகனங்களை நிறுத்திட பழைய துறைமுக சாலையோர பகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தெர்மல்நகர், முத்தையாபுரம் பகுதியிலிருந்து வருபவர்களுக்கு – மீன்பிடி துறைமுக வளாகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரின் உட்பகுதியிலிருந்து வருபர்களுக்கு – இருசக்கர வாகனங்களை நிறுத்திட தீயணைப்பு நிலையம் அருகிலும், லசால் பள்ளி வளாகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திட காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதா கோவில் திருவிழாவிற்கு வந்து செல்லும் பொதுமக்களின் நலன் கருதி போதிய போக்குவரத்து காவலர்கள் கொண்டு போக்குவரத்து ஒழுங்கு செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாதா கோவில் திருவிழாவிற்கு வந்து செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி, பெற்றோர்களை தவறவிட்ட குழந்தைகளின் பெற்றோர்களை எளிதில் கண்டறியும் வகையில் புதிய முயற்சியாக மாதா கோவில் வரும் அனைத்து குழந்தைகளின் கைகளிலும் பெற்றோர்கள் விபரம் மற்றும் தொலைபேசி எண் அடங்கிய பேண்ட் காவல்துறை மூலம் அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ‘

பேட்டியின் போது மத்திய காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் சிசில்,  ஆகியோர் உடனிருந்தனர்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image