கள் குடித்து விட்டு லஞ்சம் தொண்டி தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்..

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய தனி பிரிவு காவலர் ராம்குமார் . இவர் புதுவயல் கிராமத்தில் பனங்கள் குடித்து விட்டு போதையில் கள் விற்றவரிடம் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில்பரவி வருகிறது.

சட்ட விரோத சம்பவங்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிக்க வேண்டிய தனிப்பிரிவு காவலரே ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை மாதாந்திர மாமூல் தந்து விட்டு கள் விற்பனையை தொடரலாம் என சட்ட விரோத சம்பவங்களுக்கு உடந்தையாக செயப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, இது தொடர்பான கள விசாரணை அறிக்கை அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவில் தொண்டி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..