கீழக்கரையின் கீர்த்திக்கு திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தப்படுகிறதா??..

கீர்த்திமிகு கீழக்கரையின் கீர்த்திக்கு திட்டம் போட்டு களங்கம் ஏற்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம், சமீப காலமாக அவ்வூரிலும், அவ்வூர் பெயரிலும் அரங்கேற்றப்படும் சம்பவங்கள் எண்ண தோன்றுகிறது.

கீழக்கரையில் பல்லாண்டு காலமாக இஸ்லாமியர், இந்து, கிறிஸ்தவர்கள் என ஒற்றுமையுடனும், சகோதரத்துத்துடன் இன்று வரை வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த விசயம்.  இந்நிலையில் கடந்த வருடம் சில கீழக்கரையில் வேரில்லாத அமைப்புகள் உண்ணாவிரதம் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சமுதாயத்தினரிடேயே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பகிரங்கமாக பேசினர்.

பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் தீவிரவாத செயலுக்கு துணை போனதாக சில நபர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் 15/07/2019 அன்று வெளிநாட்டில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியா திருப்பி அனுப்பப்பட்ட 14நபர்கள் இந்திய தலைநகரில் தேசிய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  இந்திய அரசாங்கமே முழுமையான விபரங்கள் வெளியிடும் முன்பே சில இணையதளங்களும், முன்னனி செய்தி சேனல்களும் “14 பேரும் கீழக்கரையை சார்ந்தவர்கள்” என்று வேக வேகமாக செய்தியை பரப்பியுள்ளனர்.  கீழக்கரையை சார்ந்த சில நபர்கள் இருந்தாலும், என்னவென்றே முழு விபரம் தெரியாமல் ஒட்டு மொத்தமாக கீழக்கரை என்று குற்றம் சாட்டுவது, கீழக்கரை பெயருக்கும், அங்குள்ள நன்மக்களுக்கும் களங்கம் ஏற்படுத்துவதே தலையாய நோக்கமாக தெரிகிறது.

அதே சமயம் இந்தியாவின் ஒற்றுமைக்கு களங்கம் விளைவிப்பவர்கள் கீழக்கரை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, எந்த ஊரை சார்ந்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாரும் மாற்று கருத்து கொள்ள முடியாது. ஆனால் காரணம் இல்லாமல் பழி சுமத்துவதை தடுப்பதும் அனைவருடைய கடமையாகும்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..