தமிழக சட்டசபையில் இன்று 16.07.19-சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை தொடர்பாக 108 புதிய அறிவிப்புகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியீடு

சுகாதாரத்துறை தொடர்பாக 108 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். மதுரையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ. 45 லட்சம் செலவில் எக்மோ கருவி அமைக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களை மீறியதாக 888 வழக்குகள் பதிவு.மதுரையில் ரூ.20கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்றும் ஆண்டுக்கு 5000 மருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்படும்.தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் தடுப்பூசி, சிகிக்சை திட்டம் ரூ. 6.43 கோடியில் செயல்படுத்தப்படும். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ. 5 கோடியில் 128 சி.டி.ஸ்கேன் கருவி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..