தமிழக சட்டபேரவை விதி எண் 110-ன் கீழ் திட்டங்களை முதல்வர் அறிவித்தார்

சேலம், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டம் ரூ.100 கோடியில் விரிவுபடுத்தப்படும்.நடப்பாண்டில் துணை நீர் மேலாண்மை பணிகளுக்காக ரூ.116.29 கோடி செலவிடப்படும்.கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்படும்.

தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4% லிருந்து 6% ஆக உயர்த்தப்படும்.பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு நடப்பாண்டில் ரூ.10 கோடி மதிப்பில் 2.5 கோடி பனை விதைகள் வேளாண்மை& தோட்டக்கலை துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும்.நடப்பாண்டில் 100 விதை சேமிப்பு கிடங்குகளுடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை கட்டுவதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நடப்பாண்டில் மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள்,உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பில் தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா அமைக்கப்படும்.சிறு தானியப் பயிர்களின் சாகுபடியினை அதிகரித்து, உற்பத்தியை உயர்த்திட நடப்பாண்டில் ரூ.13.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நடப்பாண்டில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில், கூடுதலாக கரும்பு சாகுபடி இயந்திரங்களுக்கான 10 வாடகை மையங்கள் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்படும்.மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக நடப்பாண்டில் மேலும் 150 மதிப்புக்கூட்டும் மையங்களை உருவாக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்.இந்த ஆண்டு 243 கிராம அளவிளான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் ரூ.19.44 கோடியில் அமைக்கப்படும்.இத்தகைய இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் வாங்க ரூ.70.30 கோடி நடப்பாண்டில் ஒதுக்கப்படும்.தென்னை அதிகம் சாகுபடி செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் ஒன்று ரூ.16 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

நடப்பாண்டில் ரூ.12 கோடியில் 20 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.அரசு நேரடி கொள்முதல் செய்வதற்காக 90 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், 100 உழவர் சந்தைகளிலும் கூடுதலாக கடைகள், மின்னணு எடை மேடை, கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ரூ.268.62 கோடி மதிப்பில் ஏற்படுத்தி தரப்படும்.உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் வசதி பெற்று தொழில் துவங்க நடப்பாண்டில் ரூ.266 கோடி வரை கடன் உதவி அளிக்கப்படும்.

சூரிய சக்தியால் இயங்கும் சிறிய அளவிளான குளிர்பதன அலகுகளை நிறுவிட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.100 கோடியில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.இந்து சமய அறநிலையத்துறை ஆளுமையின் கீழ் உள்ள 1000 கிராமப்புற கோவில்களில் திருப்பணி மற்றும் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ள, நடப்பாண்டில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள நடப்பாண்டில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும்.- சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவிப்பு..

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..