காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மண்டபம் காந்தி நகரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை நடத்திய உயர்வோம் உயரச்செய்வொம் நிகழ்வு…

இன்று (15/07/2019) பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்  117-வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மண்டபம் காந்தி நகரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை நடத்திய உயர்வோம் உயரச்செய்வொம் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜர் என்ற தலைப்பில் பேச்சு, கவிதை, பாடல், ஓவியம் மற்றும் கட்டுரைத் திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவியருக்கு வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் உயர்வோம் உயரச்செய்வோம் எனும் திட்டத்தின் சார்பாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை நல்லாசிரியர் விருது பெற்ற உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்கள். ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி முதன்மைச் செயலர் Dr. தஹ்மிதா பனு மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ மாணவியர் மற்றும் பள்ளியின் சார்பாக ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..