இராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி வட்டாரத்தில் இரவில் பூட்டிய கடைகளில் கை வரிசை… காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கேமரா… 3 பேர் சிக்கினர்..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்திற்குபட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவில் பூட்டிய கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசை யில் உள்ள அரிசி மண்டியில் இரவில் பூட்டை உடைத்து அங்கிருந்த லேப்டாப், ரூ 10 ஆயிரம் ரொக்கம் திருடு போனது. இந்த துணிகர சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. வீடியோ ஆதாரங்களுடன், திருப்புல்லாணி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

தடயவியல் நிபுணர்கள், உதவியுடன் கைரேகை சேகரிக் கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர், தினைக்குளம் பகுதியில் மொபைல் போன் ரீ-சார்ஜ் கடைக்குள் புகுந்து 2 லேப்டாப், ரூ. 86 ஆயிரம், திருப்புல்லாணி யில் உள்ள சரவணா ஸ்டூடியோவுக்குள் புகுந்து தலா 2 லேப்டாப், கேமரா ரூ.56 ஆயிரத்தை திருடியது உறுதியானது. சிறிய கடைகளை குறிவைத்து நள்ளிரவில் பூட்டை உடைத்து தனி நபராக  கை வரிசை காட்டி பணம், மின் சாதன பொருட்கள் கொள்ளை குறித்து போலீசார் துரித விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தற்போது 3 பேர், திருப்புல்லாணி போலீசில் சிக்கியுள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..