திண்டுக்கல் ஆவின்பாலகம் பொது மேலாளர் 18 லட்சம் கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம்..

திண்டுக்கல் ஆவின் பாலகத்தின் பொதுமேலாளக பணிபுரியும் முகமதுபரூக். இவர் ஆவின் பாலகம் விற்பனை இல்லாத பகுதியான செந்துறை பகுதியில் 18லட்சத்திற்க்கு விற்பனை செய்ததாகவும்,  விவசாயிகளிடம் வாங்கிய பாலுக்கு பணம் தராமல் மோசடி செய்ததாகவும் அரசு நடத்தும் திண்டுக்கல்லில் உள்ள ஆவின் பாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்ததாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆவின் தலைவர் செல்லச்சாமிக்கு அரசு கார் இருக்கும் போதே புதிதாக ரூ 32 லட்சத்திற்கு சொகுசு கார் வாங்கியது உட்பட ஏராளமான புகாரர எழுந்துள்ளது.

இப்புகாரின் அடிப்படையில் சென்னை ஆவின் பெடரேசன் திண்டுக்கல் ஆவின் பொது மேலாளரை பணியிடை நீக்கம் செய்தது மேலும் ஆவின் முறைகேட்டில் ஈடுபட்ட. மேலாளர் தினகரபாண்டியன் விற்பனை பிரிவு மேலாளர் வெங்கடேஷன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது செய்தி வி.காளமேகம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..