மதுரையில் வானவில்லுடன் சாரல் மழை..

மதுரை பைபாஸ் சாலையில் இன்று (15/07/2019) மாலை திடீரென சாரலிடன் மழை பெய்தது.  பின்னர் மழையை தொடர்ந்து வெயிலும், அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் மிகப்பெரிய அளவில் வானவில் ஒன்று தோன்றியது. நவீன மயமான அவசர உலகில் இயற்கையின் அற்புதத்தை கண்ட மதுரை மக்கள் மகிழ்ந்தனர்.

அதே போல் பல குழந்தைகளுக்கு புத்தகத்தில் வானவில்லை காட்டி பாடம் புகட்டியவர்கள், நேரடியாக குழந்தைகளுக்கு வானவில்லை காட்டி மகிழ்ச்சியடைந்தனர். அப்பகுதி மக்களுக்கு வானவில் அரை மணி நேரம் அழகு காட்டி மறைந்து சென்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…