கஞ்சா வியாபாரிகள் கோஷ்டி மோதல்??… கீழக்கரையில் தொடரும் கொலை..மாயமான வாலிபர் உடல் தோண்டி எடுப்பு..

கல்வி நிலையங்களும், கொடையாளிகளும் நிறைந்து வாழ்ந்த, வாழ்ந்து வரும் கீழக்கரையில் கடந்த சில வருடங்களாக ஊரின் மத்தியில் நீக்க முடியாத டாஸ்மாக் கடைகள், பள்ளி மாணவர்கள் முதல் குடும்பஸ்தர்கள் வரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் கொடுமை.  அதையும் தாண்டி கீழக்கரையில் தாராளமாக விற்கப்படும் கஞ்சா, அதை தடுக்க கோரி பல சமூக அமைப்புகள் நடவடிக்கை எடுக்க கொடுத்த கோரிக்கையும் என்ன ஆனது என்று தெரியாத சூழலே…

இந்த நிலையில் கடந்த வருடம் கஞ்சா விற்கும் பிரச்சினையில் கீழக்கரை புதுத்தெருவில் ஒருவர் (ஆட்டு வியாபாரி ஹக்) கொலை செய்யப்பட்டார்.  இந்நிலையில் ஜாமீனில் அக்கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி ஓருவர் (கச்சி மரைக்கா) கடந்த மார்ச் மாதம் முதல் தலைமறைவாகியுள்ளார்.  அதில் சந்தேகமடைந்த உறவினர்கள் ஆட்கொணர்வு மனு ஒன்று அளித்துள்ளனர், இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சொக்கநாதர் கோயில் தெருவில் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையும் கஞ்சா வியாபாரம் தொடர்பாக இருக்கும் என்ற கோணத்தில் விசாரனை தொடங்கியதில் ஜாமீனில் இருந்தவர், கஞ்சா வியாபாரிகளின் ஒத்துழைப்போடு வெளியூர் கூலி ஆட்களை வைத்து மாயமான கச்சி மரைக்கா கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமான விபரம் கீழ் வருமாறு:-

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஆடு வியாபாரி ஹக். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் குத்திக் கொல்லப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய கச்சு மரைக்காயர் (எ) முகம்மது இம்ரான் கான் உள்ளிட்ட சிலருக்கும் கஞ்சா வியாபாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்.15 முதல் கச்சு மரைக்காயர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. மாயமான கச்சு மரைக்காயரை கண்டுபிடித்து தருமாறு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அவரது குடும்பத்தினர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக போலீசாரின் துரித விசாரணையில், கஞ்சா வியாபாரி சாகுல் ஹமீது உள்பட 4 பேர் சேர்ந்து கச்சு மரைக்காயரை கொலை செய்து கண்ணாடி வாப்பா கடற்கரை மணலில் புதைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கச்சு மரைக்காயர் உடலை போலீசார், தாசில்தார் முன்னிலையில் இன்று (13/07/209) மதியம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்நிலை தொடராமல் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இளைய தலைமுறையை காப்பாற்றுமா??.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..