Home செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆளுமை திறன் மேம்பாடு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆளுமை திறன் மேம்பாடு நிகழ்ச்சி..

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆளுமை திறன் மேம்பாடு நிகழ்ச்சி இன்று (13.07.2019) காலை 9.45 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை இரண்டாமாண்டு வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த மாணவி M. ஃபாரிகா பர்வின் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் மாணவிகள் தங்களது அடையாளத்தை காண்பிக்குமாறும், தன்னம்பிக்கை, தொடர்பு திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள அறிவுரை கூறி வரவேற்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் Dr.J.பெரியார் லெனின்,MBBS, DPM, இராமநாதபுர மாவட்ட மனநல மருத்துவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு விருந்தினர் மாணவிகள் தங்களது சிந்தனை, உணர்வு, நடவடிக்கை, குணம், தனக்கு என்ற அடையாளம் போன்ற ஆளுமை திறனை வளர்க்குமாறும் “உனக்கு நிம்மதி வேண்டுமென்றால் பிறர் குறையை காணாதே” என்று மாணவிகளுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் ஏற்பட்ட சந்தேகத்தையும், கருத்துகளையயும் மாணவிகள் பின்னூட்டம் கேட்டு அறிந்தனர். அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் வேலைவாய்ப்பு செல் ஒருங்கிணைப்பாளர் S.ஜெர்மியா ஜென்மரசி நன்றியுரை வழங்கினார். இறுதியாக தேசியகீதத்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!