வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜக., வை தண்டிக்கணும் ப.சிதம்பரம் பேட்டி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், கர்நாடகா மாநில ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாவட்ட தலைவர் எம்.தெய்வேந்திரன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் பாபு, நகர் தலைவர்கள் அப்துல் அஜீஸ் (பரமக்குடி), டி.எம்.எஸ்.கோபி ( ராமநாதபுரம் ) உள்பட பலர் கலந்து கொண்டனர். ப. சிதம்பரம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் விலகினால் எனில், கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் தானாக விலகவில்லை பதவி ஆசை காட்டி இழுக்கப்படுகின்றனர். பா.ஜ.க., வின் குதிரை பேரத்தை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடு ஏற்படுத்தும்: ஒரே நாடு, ஒரே தேர்தல் என நரேந்திர மோடி சொல்வதின் முழுப்பொருளை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது தான் உட்பொருள். இதை உரிய கிள்ளி எறியாவிடில், இந்த விஷச்செடி நாடு முழுவதும் பரவி இந்திய ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விடும். இதை உணர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் தண்டிக்க வேண்டும் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..