உசிலம்பட்டி அருகே சோளக்கதிர்போதிய விலையில்லாததால் அறுவடை செய்யாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சந்தைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சோளம் அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்த சோளம் அதிக விலை போகும் என்ற நோக்கில் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். ஆனால்

இந்த வருடம் பருவ மழைகள் பெய்யாததால்; தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி பாதுகாத்து வரும் நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இந்த சோளக்கதிர்களுக்கு போதிய விலையில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால் சென்ற வருடம் சோளம் 1 குவின்டால் ரூ5000 வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 1 குவின்டால் ரூ2000 வரை தான் விற்பனை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் சோளக்கதிர்களை அறுவடை செய்யாமல போதிய விலைக்காக காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்நாத் .

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..