மின்மிகை மாநிலத்தில் மின்சாரமே இல்லாத மாவட்டமாக மாறி வரும் இராமநாதபுரம்… பல கோடிகள் வர்த்தக இழப்பு…

மின்மிகை மாநிலத்தில் மின்சாரமே இல்லாத மாவட்டமாக மாறி வரும் இராமநாதபுரம். ஆம் மிகை மாநிலம் என மார்தட்டி கொண்டிருந்த தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக இராமநாதபுரம். மாவட்டமே இருளில் மூழ்கி கிடக்கிறது.

இதனால் முதியவர்கள், நோயாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும். பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.  அதற்கு ஒரு படி மேலாக மின்சாரத்தை நம்பி தொழில் நடத்தும் பலர் தங்களது வியாபார தலங்களை சில தினங்களாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சாமானிய மனிதனாக பார்க்கும் பொழுது மின் வெட்டு என பார்த்தாலும், இதனால் அரசாங்கத்துக்கும் வர்த்தக ரீதியாக பல லட்சம் கோடி தினமும் இழப்பு ஏற்படுகிறது என்பதை அறிந்து ஏன் ஆட்சியாளர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மெத்தனமாக உள்ளார்கள் என்று புரியவில்லை.  மேலும் இதையும் அரசியல் ஆக்கும் விதமாக சில மணிநேரம் வந்த மின்சாரத்திற்கு மாவட்ட அமைச்சரின் தீவிர முயற்சி என்ற பாராட்டு மடல் வேறு.

இது சம்பந்தமாக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வழுதூர் 230 கி.வோ, 110 கி.வோ., துணை மின் நிலையங்கள், வழுதூர் ஆர்.கே.பிளான்ட் பீடர் 110 கி.வோ ஆகியவற்றில் ஜூலை இரவு 10: 25 மணி முதல் பழுது  ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மண்டபம், பெருங்குளம், ராமேஸ்வரம் துணை நிலையங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜூலை 10 இரவு 9: 10 மணி
காவனூர் – வாலிநோக்கம் மின் பாதையிலும், ஜூலை 10 இரவு 9:54 மணியில் இருந்து வாலிநோக்கம் – ஏர்வாடி மின்பாதையிலும், ஜூலை 10 இரவு 10:30 மணியில் இருந்து ஏர்வாடி_கீழக்கரைமின் பாதையிலும் மின் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பகிரப்படும் 110 கி.வோ வாலிநோக்கம், கீழக்கரை, ஏர்வாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மின் வெட்டு நிலவுகிறது. இதன் மூலம் 76 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகள் மின்சாரம் பாதித்துள்ளதாக மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் துயர் நீக்க உடனடி நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..