நிலக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் உள்ள பிள்ளையார்நத்தம் கண்மாய் குரிய சங்கத் தேர்தல் நடத்துவதற்காக நேற்று முன் தினம் 09.07.2019 காலை 10 மணிக்கு ஒலிபெருக்கி மூலம் 12 மணிக்கு சங்கத் தேர்தல் நடைபெறுவது குறித்து விவசாயிகளை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பில் விவசாயிகள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பிள்ளையார்நத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் சில விவசாயிகளை வைத்து சங்க தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை ஆதி திராவிடர் தாசில்தார் பாண்டிச் செல்வி தலைமையில்   நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில்  கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி தலைவர் மற்றும் செயலாளர் ,பொருளாளர்,      ஆகிய பதவிகளை தேர்வு செய்து தருமாறு கூறி கூட்டத்தை ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று 10.07.2019 பிள்ளையார்நத்தம் ஊராட்சி நாட்டார் வகையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு உள்ள பொது பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 9ஆம் தேதி நடந்த  கூட்டத்தை ஒத்தி வைத்தது மட்டுமல்லாமல் கிராம மக்களின் முடிவை கேட்டுத்தான் குடிமராமத்து பணியை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார்   ராமசாமி தற்போது நடந்த கூட்டம் ஒத்திகை கூட்டம் தான்   எனவே நீங்கள் அதிகாரிகளிடம் சென்று உரிய கோரிக்கை மனுவை கொடுங்கள் என கூறினார்..                                                  .      .

  இதனை ஏற்று நிலக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக உதவி செயற்பொறியாளர் நீதிபதியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட அதிகாரி நீதிபதி கிராமங்களுக்கு உரிய தகவல் சொல்லியபிறகு தலைவர் ,செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறி சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தார். இச்சம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..