
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவைத் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார்.மாணவப் பேரவை ஆலோசகர்கள் கணிதத்துறை உதவிப்பேராசிரியை இராஜேஸ்வரி ,வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை இம்ரானா ஆகியோர் மாணவப் பேரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்தனர்.இறையாற்றல், படைப்புத்திறன்,படைப்பினங்கள், கல்வி ஞானம் இயற்கை இன்றியமையாததாக நம் வாழ்க்கைத்தளத்தில் இருந்து நமக்கு பேருதவி செய்கின்றன எனஐதராபாத், தெலுங்கானாயாவர் பேக்
நிறுவனர், மற்றும் தலைவர் யாவர் பேக் அசோசியேட்ஸ் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் வாழ்க்கை பயிற்சியாளர், ஒருங்கணைப்பாளர் ஷேக் மிர்ஷாசீதக்காதி அறக்கட்டளை திட்ட இயக்குநர் சிராஜிதீன், அலாவுதீன் ஹைதர், செய்யது நூர் முகம்மது, செய்யது அசீம்கான், கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள்,தேர்வாணையர், பல்துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள்,2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவப் பேரவை செயலாளர்
எஸ்.ஜீஹி ஆமினா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் அல்ஹாஜ் ஷேக் தாவூத்கான், மாணவப் பேரவை ஆலோசகர் செய்திருந்தனர்.