ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி போக்குவரத்து காவல் துறையினர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி ஆட்டோக்களை இயக்கக்கூடாது. பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது.ஆட்டோக்களை சாலையின் நடுவே ஓட்டாமல் சாலையின் இடதுபுறம் மட்டுமே ஓட்டவேண்டும். சாலையின் வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ ஆட்டோவை திருப்பும்போது பக்கவாட்டு கண்ணாடியை பார்த்து பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி INDICATOR (குறியீடு) போட்டு திருப்பவேண்டும்.அதிவேகமாக செல்லக்கூடாது.அதிக ஒலி எழுப்பி வாகனத்தை இயக்குவதால் அதிக வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அருகில் வாகனத்தின் ஒலி எழுப்பக்கூடாது.ஆட்டோவில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் அதிகமான நபர்களை ஏற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து சமிக்ஞையை (SIGNAL) மதித்து நடக்கவேண்டும்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..