Home செய்திகள் தேசிய மீன் வளர்ப்போர் தினம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்புரை..

தேசிய மீன் வளர்ப்போர் தினம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்புரை..

by ஆசிரியர்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் இன்று  கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தேசிய மீன்வளர்ப்போர் தினம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்  இன்று  கொண்டாடப்பட்டது. தேசிய மீன்வளர்ப்போர் தினமானது வருடந்தோறும் ஜீலை மாதம் 10-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய கெண்டைமீன்களில் தூண்டும் முறை இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டறிந்த விஞ்ஞானிகளான பேராசிரியர்கள் ஹிராலால் சௌத்ரி மற்றும் அலிகுன்கி ஆகியோரின் நினைவாக தேசிய மீன்வளர்ப்போர் தினமாக கொண்டாடப்படுகிறது.. இந்நிகழ்ச்சியின் நோக்கமானது மீன்வளர்ப்போரிடையில் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உற்பத்தியில் உள்ள தற்போதைய நிலையைவிட மீன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க செய்வதற்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் | சார்ந்த மொத்தம் 60 பண்ணையாளர்கள் மீன்வளத் தொழில் முனைவோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் முனைவர் க. வீரபத்ரன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார், அவர் பேசுகையில்,:-

இந்திய பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மேலும், மீன் பண்ணையாளர்கள் அலங்கார மீன்வளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு, கூண்டு வளர்ப்பு, பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பு ஆகிய வளர்ப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத் தொழில் முனைவோர் மீன்வளத் தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி மீன்வள இணை இயக்குநர், ந. சந்திரா, மீன்வளத்துறை, சார்ந்த மீன்வளர்ப்பிற்கான திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து எடுத்துரைத்தார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, முனைவர். ப. வேலாயுதம், தனது தலைமையுரையில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள் குறித்தும், மீன் உற்பத்தியை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த மீன்வளர்ப்பை மேன்மையாக கையாண்டு வரும் தலை சிறந்த மீன்வள விவசாயிகளான எஸ்.முத்துக்குமார், வீ.பிச்சையா, அருள்மணி அகஸ்டின்,  பி.சின்னத்துரை, கு.சரவணன், வி. செல்வம் மற்றும் குழுவினரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில், திருமதி. நீ.பாலசரஸ்வதி, மீன்வள உதவி இயக்குநர், தூத்துக்குடி நன்றியுரை ஆற்றினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!