கீழக்கரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு…

கீழக்கரை ரோட்டரி சங்கம் ஊரின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு நற்பணிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.   2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று 09/07/2019 செவ்வாய் கிழமை, மாலை 4.30 மணியளவில் ஹுசைனியா மஹாலில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராகத் ரோட்டரி மாவட்ட ஆளுனர் P.N.B முருகதாஸ் கலந்து கொண்டார். இதில் சிறப்பு பேச்சாளராக பேராவூரணி பஞ்சாயத்து யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி சுகுமார் கலந்து கொண்டார். அதே போல் கௌரவ விருந்தினராக ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர்  So.Ba.ரெங்கனாதன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் வாழ்த்துரையை டாக்டர்.அலாவுதீன் வழங்கினார். இந்த வருடம் முனியசங்கர் தலைவராகவும். செய்யது முஹம்மது ஹூசைன் செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்வில் ரோட்டேரியன் அப்பா மெடிகல் சுந்தரம் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பதவியேற்பு நிகழ்வில் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளியின் தனித்திறமையுடன் யோகாவில் சிறந்து  விளங்கும் அபினவ் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் செய்யது ஹங்ஃபில் மரைக்கா ஆகியோருக்கு சிறப்பு நினைவு மடல் வழங்கப்பட்டது.

அதே போல் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் சென்றடைய ஒத்துழைப்பு வழங்கிய கீழை நியூஸ் உட்பட பல் வேறு பத்திரிக்கையாளர்களை பாராட்டும் விதமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் பணிகள் சிறக்க சத்தியபாதை –  கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..