மாரடைப்பால் நின்று போன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு வழங்கல்

மாரடைப்பால் நின்றுபோன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி சாமானியர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இக்கருவியை ரயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே கோட்டம் மதுரை ரயில் நிலையத்தில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனம் (வேலம்மாள் மருத்துவமனை) சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நின்றுபோன நோயாளியின் இதயப் பகுதியில் ஷாக் கொடுத்து இதயத்துடிப்பை சீராக்க முயற்சி செய்வர். இச்சிறிய கருவி விபத்து போன்ற அவசர நேரங்களில் மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இக்கருவியை மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் . ஆனால் இப்பொழுது சாதாரண மக்கள் கூட ஒரு சிறிய பயிற்சியின் மூலம் அவசர காலத்தில் இக் கருவியை பயன்படுத்த முடியும். இக்கருவியில் உள்ள பட்டைகளை பாதிக்கப்பட்டவரின் நெஞ்சின் மீது வைத்து அழுத்த செய்யும்பொழுது அவர்களின் இதயத்துடிப்பை கணித்து இதயத்துடிப்பு சீராக இல்லை என்றால் அதற்கேற்ப மின் அதிர்ச்சியை ஏற்படுத்தி இதயத் துடிப்பை சீராக்கும். இதன் மூலம் சிறந்த இதயத் துடிப்பு அல்லது இதயம் திடீரென்று நின்று விட்டால் மீண்டும் இதயத்தை இயக்க வைக்க முடியும்.


டாக்டர் மாதவன் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் (வேலம்மாள் மருத்துவமனை) வரவேற்றார். கூடுதல் கோட்ட மேலாளர் ஓ.பி.ஷா டிக்பிப்ரிலேட்டர் கருவியை பெற்றுக்கொண்டார் .
தலைமை மருத்துவ அதிகாரிடாக்டர் ஜீ. சாஹு கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பத்மலமா, மதுரை ரயில் நிலைய இயக்குனர் சச்சின் குமார், மற்றும் ரயில்வே அதிகாரிகள்ல் பங்கு கலந்துகொண்டனர்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal