Home செய்திகள் சடையன்குளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ்; ரூ.36.70 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமிதொடங்கி வைத்தார்

சடையன்குளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ்; ரூ.36.70 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமிதொடங்கி வைத்தார்

by mohan
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் தங்கச்சியம்மாபட்டி கிராமத்தில் உள்ள சடையன்குளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ்; மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை இன்று (09.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.விஜயலட்சுமிதொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு துரித நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகளின் மதிப்பீடு ரூ.10 இலட்சங்களுக்கு கீழ் உள்ள பணிகள் அந்த பாசன சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசன சங்கம் இல்லாத இடங்களில் முன்னோடி விவசாயிகள் மூலம் நியமன முறையில் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படும். இப்பணிகளுக்கு விவசாயிகளின் பங்களிப்பாக மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் தொகையினை தொழிலாளர்கள் வடிவத்திலோ அல்லது பொருளாகவோ அல்லது ரொக்க பணமாகவோ செலுத்திட வேண்டும்.
இந்தாண்டு 2019-2020-ன்படி, 114 பணிகள் ரூ.34.35 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள  அறிவுறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம்; ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி கிராமத்தில் மேற்கண்ட திட்டத்தின்கீழ் ரூ.36.70 இலட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மற்றும் தங்கச்சியம்மாபட்டி விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து குளத்தின் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் வரத்து வாய்க்கால்களை செம்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் பரப்பலாறு அணையிலிருந்து வரப்பெறும் நீரினை சடையன் குளத்தில் தேக்குவதன் மூலம் 10 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும் குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்வதற்கும், நிலத்தடி நீர் உயர்வதற்கும்  இப்பணி அடிப்படையாக அமையும். இப்பணிகளை செம்மையாக செய்வதற்கு, சம்மந்தப்பட்ட  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளும் தங்களது பங்களிப்பை அளித்து இப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் சடையன்குளம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில்  முன்வந்துள்ளார்கள்.  குறிப்பாக சடையன் குளத்திற்கு நீர் வரத்து வாய்க்கால்களை 5 கி.மீ நீளத்திற்கு 300 ஏக்கர் அளவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அதில் சீமைக்கருவேலை மரங்கள் அகற்றுதல் பணி, வரத்து வாய்க்கால் அகலப்படுத்தும் பணி,   கரைகளை பலப்படுத்தும் பணி உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1 லட்சம் பனை விதைகள் நடுவதற்கும், வரத்து வாய்க்கல் பகுதியில் புங்கை மரங்கள் நடுவதற்கும் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
இதே போன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலைகளை செம்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி.தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குனர் கவிதா, உதவிப் பொறியாளர் (பொதுப்பணித்துறை) தனசேகர் மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!