பொய்யான பிரசாரத்தை நம்பி, தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டு போட்டு விட்டனர் – வேலூர் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்.

இது குறித்து அவர், வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

வேலூரில், கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான, தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த் மீண்டும் வேட்பாளாக நிறுத்தப்பட்டுள்ளார்.அவருக்கு ஓட்டு போடுவதா, வேண்டாமா என, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ‘நகைக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து’ என, பொய்யான பிரசாரத்தை நம்பி, தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டு போட்டு விட்டனர். ஆளும் கட்சி எம்.பி., க்களால் மட்டுமே வளர்ச்சி திட்டங்களை கொடுக்க முடியும். உருது மொழியில், பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், இஸ்லாமிய அகாடமி அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். என்னை, எம்.பி., யாக தேர்வு செய்தால் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகப்படுத்துவது, ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். மரம் வளர்ப்பது, குடிநீர் பிரச்னை தீர்ப்பது போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..