கீழக்கரை- ரோட்டரி கிளப்… புதிய அத்தியாயம்… புதிய நிர்வாகிகள்…09/07/2019 பதவியேற்பு..

கீழக்கரை ரோட்டரி சங்கம் ஊரின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு நற்பணிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.  இப்பணிகள் சீரிய வழியில் நடைபெற ஒவ்வொரு வருடமும் சமூக ஆர்வம் உள்ளவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.  அதன் வரிசையில் 2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் நியமனம் வரும் 09/07/2019 செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது.

2018-2019ம் வருட கீழக்கரை ரோட்டரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மிகவும் சிறப்புடனும், மக்கள் நலன் கருதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  இதற்கு முக்கிய காரணம்  தலைமை பொறுப்பில் இருந்த “அப்பா மெடிக்கல்” சுந்தரம், அவர் ஏற்கனவே பொதுமக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர், அதே போல் செயலாளர் ஹாசன், தான்  செய்யும் தொழிலுடன் சமூக பணியையும் முழு மூச்சாக செய்து வந்தவர்.  அதே போல் தற்போது தலைமை பொறுப்பை ஏற்க இருக்கும் முனியசங்கர் மற்றும் இன்ன பிற நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் குறைத்து எடை போட்டு விட முடியாது.  அவர்களின் முழு ஈடுபாடும், ஒத்துழைப்புமே கடந்த வருட செயல்பாடுகளின் வெற்றிக்கு காரணம் என்றால் மிகையாகாது.

இதனை தொடர்ந்து இந்த வருடம் முனியசங்கர் தலைவராகவும். செய்யது முஹம்மது ஹூசைன் செயலாளராகவும் வரும்  09/07/2019 – செவ்வாய் கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் ஹுசைனியா மஹாலில் நடைபெற உள்ள நிகழ்வில், ரோட்டரி சங்க தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில்  பதவி ஏற்க உள்ளார்கள்.

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் பணிகள் சிறக்க சத்தியபாதை –  கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..