கீழக்கரை – மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்திற்கும் பணம் வேண்டாம்… மனம் போதும் என்பதற்கு ஒரு உதாரணம்…

தானத்திற்கும், தர்மத்தற்கும் பெயர் பெற்ற சீதக்காதி வாழ்ந்த கீழக்கரையில் பல தொண்டு அமைப்புகள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் என  பல அமைப்புகள் இருந்தாலும் தனி மனிதன் செய்யும் சமூக நற்காரியங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த முகைதீன் அப்துல்காதர் என்ற சாமானிய மனிதனின் செயல் அனைவரையும் சிந்திக்கவும், ஆச்சரியப்படவும் வைத்துள்ளது. சென்னை மைலாப்பூரை சேர்ந்த 96 வயது முதியவர் சந்திர சேகரன் ஜெயலெட்சுமி தம்பதியினர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் சிகிச்சை செய்ய வந்துள்ளனர்.
அதே சமயம் முகைதீன் அப்துல் காதர் சிகிச்சை காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக மதுரை அரவிந்த் மருத்துவமனை சென்றுள்ளார்.

அச்சமயம  டாக்டரிடம் காண்பித்து செல்லும் நேரம் முதியவர் சந்திர சேகர் இவரிடம் தனியாக வந்து நலம் விசாரித்து விட்டு வந்த இடத்திடல் செல் போன் பணம் முக்கிய பொருட்கள் களவு கொடுத்து விட்டதாகவும், எங்களது ஒரே மகன் கப்பல் விபத்தில் இறந்து விட்ட பின் யாருமில்லாதவர்களாய் நிற்கிறோம், இப்போ நாங்கள் இருவரும் சாப்பிட்டு ஒரு வாரம் ஆவதாகவும் கூறியுள்ளனர். இதை கேட்ட முகைதீன் அப்துல் காதர் அந்த இருவருக்கும் சாப்பாடு வாங்கி தந்து போன் நம்பரை கொடுத்து வந்துள்ளார்.

இரு தினங்கள் கழித்து அவர்கள் இருவரும் போனில் தொடர்பு கொண்டு தாங்கள் ஊருக்கு வருவதாகவும், தங்களுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்கவும் வேண்டுகோள் விடுத்தனர்.  கடந்த 20 நாட்களாக கீழக்கரையில் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்த நிலையில் நேற்று (05/07/219)  மதியம் 01.00 மணி அளவில் சந்திர சேகரன் மரணம் அடைந்து விட்டார். உடனே அப்துல்காதர் கீழக்கரை காவல் நிலையம் சென்று தகவல் கொடுத்துள்ளார். இவரின் நல்லெண்ணத்தை பார்த்து  கீழக்கரை உளவுத்துறை Si ஜேம்ஸ் அவர்கள், முதியவரின் ஈமச் சடங்கு செலவுகள் அனைத்தையும் ஏற்று, அடக்கம் செய்வதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று கீழக்கரை சுடுகாட்டில் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உடலை  நல்லடக்கம் செய்தனர்.

கீழக்கரையில் சாமானிய மனிதனான அப்துல்காதரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.  இவரை நீங்கள் வாழ்த்த விரும்பினால்  9677978809 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image