Home செய்திகள் பரிதிமாற் கலைஞர் 149வது பிறந்தநாள் விழா

பரிதிமாற் கலைஞர் 149வது பிறந்தநாள் விழா

by mohan

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் 149வது பிறந்தநாளான இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பாக புகழ்வணக்கம் செலுத்தி,மாலைஅணிவித்துமரியாதைசெய்யப்பட்டது.இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் செ.மருதமுத்து,கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் கரிகாலன்,செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன்,இளைஞர் பாசறை இணை செயலாளர் கார்த்தி மற்றும் விளாச்சேரி ராஜு, முத்துமணி,ராஜேஷ்,நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 – நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.

மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள .செம் மொழி முதல் குரல் கொடுத்தார் (சூரிய நாரண சாஸ்திரி) தமிழுக்கு தனது பெயரை மாற்றி வைத்து தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் 149வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் திரு கிருஷ்ணசாமி என்ற ராஜு அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாநில பொதுச்செயலாளர் திரு ஜகன்னாதன் அவர்களும் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!