உசிலம்பட்டியில் ரோஜா செடியினை ஆர்வத்துடன் வாங்கும் பள்ளி மாணவிகள்

உசிலம்பட்டியில் ரோஜா செடியினை ஆர்வத்துடன் வாங்கும் பள்ளி மாணவிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் டிஇஎல்சி தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி அருகில் ஓசூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கோவிந்தன் (35) என்பவர் ரோஜா செடியினை விற்பனை செய்து வருகிறார். மாணவிகளுக்காக 1 ரோஜா செடி ரூ 15 க்கு விற்பனை செய்யப்படுவதால் மாணவிகள் பள்ளி முடிந்ததும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.தமிழகமே தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில் இது போன்ற ஏதாவது மரம், செடி, கொடிகளை நட்டு பராமரித்தாலே போதும் மழை வருவதற்கு ஏற்றதாக இருக்கும் என மாணவிகள் தெரிவித்தனர். இந்த பள்ளி பருவத்திலேயே ரோஜா பூ செடிகளை வாங்கி தங்களது வீட்டில் பராமரிக்கும் மாணவிகளை கண்டு சமூக ஆர்வலர்கள் சிலரும் பெரிதும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..