விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்த மத்திய அரசின் பட்ஜெட்- பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்த மத்திய அரசின் பட்ஜெட்- பி.ஆர்.பாண்டியன்

இந்திய அரசின் 2019 – 20 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததற்கு விவசாயிகளுக்கு நன்றி சொல்லிவிட்டுவிவசாயத்துறையில்தனியாரை அனுமதிக்க ப்போவதாக அறிவித்துள்ளது ஏன்?இதனை ஏற்க இயலாது.வன்மையாகக் கண்டிக்கதக்கது.

விவசாயிகள் கடன் நெருக்கடியால் தற்க்கொலைகள் தொடரும் நிலையில் கடன் தள்ளுபடி குறித்தோ, நிவாரணம் குறித்தோ எந்தவொரு அறிவிப்பும் இடம் பெறாதது விவசாயிகளை மறைமுகமாக ஒடுக்க நினைக்கிறதோ அரசு என்று அஞ்ச தோன்றுகிறது.விவசாய உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்தோ, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவது குறித்தோ எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

இந்தியா முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 350 தாலுகாக்கள் முற்றிலும் நிலத்தடி நீர் பறிபோய்விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதனை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நதி நீர் இணைப்பு திட்டம் குறித்தோ, புதிய நீர் பாசனத் திட்டங்கள் குறித்தோ அறிவிப்புகள் இடம் பெறவில்லை.

நதிகள் தேசிய மயமாக்குவது குறித்து அறிவிப்புகள் இடம் பெறவில்லை. உள்நாட்டு நீர் வழி சாலைகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது.காப்பீடு துறைகளில் 100% தனியாரை அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பயிர் காப்பீடு திட்டம் முற்றிலும் விவசாயிகளுக்கு பயனளிக்காது.ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் பெரும் முதலாளிகளுக்கான சலுகை நிறைந்ததாக உள்ளது.நிதி ஒதுக்கீடுகள் குறித்து வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை. இதனால் மாநிலங்களுக்கு மாநிலம் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டும் நிலை ஏற்படும்.மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே பரிசாக அமைந்துள்ளது என்றார்.மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image