பட்ஜெட்-2019.ஓா் பாா்வை

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9.9 கோடி வீடுகள் கட்டப்படும்

அடிப்படை வசதிகளை வழங்குவதில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை. 2024ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் ஆராய்ச்சித் துறையை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 114 நாட்களுக்குள் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. தேசிய விவசாய சந்தையின் மூலம் விவசாயிகள் பலன் பெற மாநிலங்களுடன் இணைந்து செயல்படநடவடிக்கை.

 5.6 கோடி கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிட முறை ஒழிக்கப்பட்டுள்ளது. 0 பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை. தேசிய விவசாய சந்தையின் மூலம் விவசாயிகள் பலன் பெற மாநிலங்களுடன் இணைந்து செயல்படநடவடிக்கை.காந்திய சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க ’காந்திபீடியா’ உருவாக்கப்படும்.

 இந்தியாவின் உயர்கல்வியை உலகத்தரத்திற்கு மேம்படுத்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும். 13,000 கிராம சாலைகள் பசுமைத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களைக்கொண்டு கட்டமைக்கப்படும். கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்.

 புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட புதிய டிவி சேனல் தொடங்கப்படும். “விளையாடு இந்தியா” திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம். ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் நிதி உதவி.

 உலக சந்தையில் இந்திய கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகளை விற்க நடவடிக்கை.ரயில் நிலையங்களை தரம் உயர்த்திநவீனமயமாக்கும்திட்டம்செயல்படுத்தப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு குறைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடரும். பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் மூலம் 1.05 லட்சம் கோடி திரட்ட திட்டம்நேரடி வரிவருவாய் 78% அதிகரிப்பு; வரிவருவாய் ரூ11.37 லட்சம் கோடியாக உயர்வு. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதும் இல்லை; தற்போது உள்ள முறையே தொடரும். நாட்டில் உள்ள 17 சுற்றுலாத் தலங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி. உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த ரூ.400 கோடி நிதி நெருக்கடியால் தவித்த 6 பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூ.70,000 கோடி மூதலீட்டு மூலதனம் வழங்கப்படும்.

 “256 மாவட்டங்களில் உள்ள 1,592 பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”. நிலையை மாற்ற ஜல் சக்தி அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும். ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை வரவு, செலவு செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி தள்ளுபடி அறிவிப்பு தொடரும்.மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..