Home செய்திகள் பெரியகுளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பல்.அரசு நடவடிக்கை எடுக்குமா.

பெரியகுளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பல்.அரசு நடவடிக்கை எடுக்குமா.

by mohan

தேனி மாவட்டம் பொியகுளம் பகுதி ஆற்றுப்படுகைகள் அதிகம் என்பதால் இங்கு இயற்கை கனிம வளங்கள் அதிகம்.இதனைப் பயன்படுத்தி சில கும்பல்கள் மணல்-கிராவல் போன்ற இயற்கை வளங்களை கொள்ளையடித்து  வருகின்றன.மணல் கடத்தல் புகார் தொடர்ந்து வந்தாலும் நடவடிக்கை என்பது மெத்தனமாகவே இருந்து வருகின்றது நேற்று இரவு லட்சுமிபுரம் பகுதிக்கு உட்பட்ட கோம்பை பகுதியில் ஜேசிபி, மற்றும் டிப்பர் லாரிகளுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட கனிம வள அதிகாரி விஜயகுமாருக்கும், தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கும் தெரிய வர ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி, மற்றும் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் இது தொடா்பாக கைலாசபட்டியைச் சோ்ந்த சுரேஷ் (எ) குண்டாஸ் சுரேஷ்-வரதராஜன் ஆகிய  2 போ் கைது செய்யப்பட்டனா்.விசாரணையில் குண்டாஸ் சுரேஷ் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல், கிராவல் போன்ற இயற்கை வளங்களை குண்டர்களின் துணையுடன் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதாகவும் இது குறித்து கேள்வி கேட்கும் அதிாாிகள் செய்தியாளா்களை லாாி ஏற்றி கொல்லமுயன்றதாகவும் கூறப்படுகிறது.எனவே அரசு இவரது அடைமொழி பெயருக்கு ஏற்றாா் போல் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென மூக ஆர்வலர்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.

சாதிக் பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!