வேடசந்தூர்- ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் மின்மாற்றி -சாலையோரத்தில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்சார கம்பங்கள் கண்டுகொள்ளாத மின்சாரத் துறை அதிகாரிகள்.

வேடசந்தூரில் இருந்து கிராமப்புற சாலை வழியாக கூவக்காபட்டி கணேசபுரம் மோள கவுண்டனூர் வள்ளிப்பட்டி ஈசநத்தம் வழியாக 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அப்பகுதி சாலையானது கரூர் செல்லும் இப்படி வேடசந்தூரில் இருந்து செல்லும் சாலைகளில் மின்சார கம்பங்கள் பல வருடங்களாக உடைந்துபோய் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது எந்த ஒரு மின்சார வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டி துணைமின் நிலையம் உள்ளது இந்த மின் நிலையத்தில் இருந்து சுமார் 50 கிராமங்களுக்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இங்க இருந்து மின்சாரம் கொண்டு செல்லப்படும் பகுதியான கூவக்காபட்டி கணேசாபுரம்மோளகவுண்னூர்வள்ளிபட்டி போன்ற பகுதிகளில் மின் கம்பங்கள் பல வருடங்களாக உடைந்துபோய் எலும்பு கூடாக காட்சி அளிக்கின்றன இதில் குவகாத்தி பகுதியில் உள்ள மின்மாற்றி சுமார் 100 மெகாவாட் அமைப்புள்ள மின்மாற்றி யானது மிகவும் பழுதடைந்து எப்பொழுது உடைந்து கீழே விழும் என்று பொதுமக்கள் பயந்து செல்லும் சூழ்நிலையில் உள்ளது அதில் உள்ள நான்கு மின்கம்பங்களும் முழுவதும் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் சூழ்நிலை உள்ளது இந்த மின்மாற்றி யானது சாலையோரத்தில் இருப்பதால் மின்மாற்றி விழுந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் சாலைகளில் பேருந்துகளும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன அப்படி செல்லும் பொழுது இந்த மின்மாற்றி ஆனது இரவு அல்லது பகல் எந்த நேரத்தில் விழுந்தாலும் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.இதேபோல் கணேசபுரம் மூல கவுண்டனூர் வள்ளி பட்டி போன்ற அனைத்துப் பகுதிகளிலும் மின்சார கம்பங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன இந்த கம்பங்களும் முழுவதும் கம்பித் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது இந்த மின்கம்பங்கள் ஆனதும் நிம்மதியும் அனைத்துமே சாலையோரத்தில் உள்ளது .இது பற்றி பொதுமக்கள் பல்வேறு முறை மின்சார வாரியத்திடம் புகார் அளித்தும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் சூழ்நிலை உள்ளது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..