விரைவில் திறப்பு விழா காண இருக்கும் கீழக்கரை தாலுகா அலுவலகம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடந்த தி.மு.க ஆட்சியில் தாலுகாவாக அறிவிப்பு வெளியிட்டு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில்110 அறிவிப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தாலுகா அமைய அறிவிப்பு வெளியிட்டார்.

இதன் அடிப்படையில் கீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைய இடம் தோடு ஆயத்தபணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் தாலுகா அலுவலகம் அமைய அரசுக்கு சொந்தமான நிலம் கீழக்கரையில் இல்லாத நிலையில் அன்றைய மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தாலுகா அலுவலகத்தை திருப்புல்லாணி பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைய முடிவு செய்தார்.

இது சம்பந்தமாக அன்றைய நகர் மன்ற தலைவி கீழக்கரை அருகாமையில் தாலுகா அலுவலகம் அமைய முயற்சி மேற்கொண்டதோடு தற்காலிகமாக தாலுகா செயல்பட நகராட்சி அலுவலகத்தில் இடம் ஒதுக்கி தர மன்ற தீர்மானம் இயற்றி, அது சம்பந்தமாக அன்றைய மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மன்ற தீர்மான அடிப்படையில் நகராட்சி அலுவலகத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட.ஆட்சியர் தற்காலிகமாக தாலுகா அலுவலகம் செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் கீழக்கரை மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் நலன் கருதி கீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைய அன்றைய நகர் மன்ற தலைவி மற்றும் சமூக ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டு கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிறுவனர் செய்யது சலாஹுத்தீனை சந்தித்து இப்பகுதி மக்கள் நலன் கருதி அவரின் சொந்த இடத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க இடம் கேட்டனர்.

இப்பகுதி மக்களின் நலன் கருதி தனக்கு சொந்தமான இராமநாதபுரம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று ஏக்கர் நிலம் தர மனபூர்வமாக ஒப்புகொண்டார். அரசின் விதி படி தான் வாக்களித்த இடத்தை தமிழக கவர்னர் பெயரில் பத்திர பதிவு செய்து இடத்தின் பத்திரத்தை அன்றைய மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் நேரில் ஒப்படைத்தார்.

இந்த இடத்தில் தாலுகா அலுவலகம் கட்டுமானம் கட்ட அரசு முடிவு செய்து இராமநாதபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும்,அமைச்சருமான மணிகண்டன் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருவதோடு இன்னும் இரண்டு மாதத்தில் பணி நிறைவு பெற்று திறப்பு விழா காண இருப்பதாக தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறினர்கள். இந்த கட்டிடத்தை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகி சித்தீக், சட்ட விழிப்புணர்வு இயக்க நிர்வாகி தாஜூல் அமீன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை முன்னாள் ஆசிரியை ஆபிதா பேகம் கூறுகையில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் நலன் கருதி தனது சொந்த இடத்தில் மூன்று ஏக்கர் நிலம் வழங்கிய சலாஹுத்தீன் காக்காவை பாராட்டுகிறேன் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..