Home செய்திகள் நரிப்பையூர் அருகே வேப்பமரத்து பனை கிராமத்தில் தொழில் முனைவோர் திறன்மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா…

நரிப்பையூர் அருகே வேப்பமரத்து பனை கிராமத்தில் தொழில் முனைவோர் திறன்மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா…

by ஆசிரியர்

நரிப்பையூர் அருகே வேப்பமரத்து பனை கிராமத்தில் உள்ளசி.எஸ்.ஐ., பெத்தேல் சர்ச் வளாகத்தில் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் நிறைவு விழா நடந்தது.

இராமநாதபுரம் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு ஆணையம் (ஏஐஆர்டி)மற்றும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து அக்கன்சர் நிறுவன தகவல் தொழில்நுட்பஉதவியுடனான ஒரு மாத காலம் பயிற்சி வகுப்புகள்நடந்தது. 

பனங்கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி, பனைஓலையில் கைவினைப்பொருட்கள் தயாரித்தல், இறால் பக்கோடா, மீன் ஊறுகாய், மீன் கட்லெட், பினாயில், சோப் பவுடர், சோப் ஆயில், சொட்டு நீலம் உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் தயாரிக்கும்தொழில்நுட்ப முறைகளை பெண்கள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏ.ஐ.ஆர்.டி., நிறுவனத்தின் இயக்குநர் தாமஸ் பீட்டர் தலைமை வகித்தார். ஐபாட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகணேசன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அற்புதம் வரவேற்றார். இடிஐஐ திட்ட அலுவலர் திருப்பதி, கிராமத்தலைவர் ஜீவராஜ், பள்ளித்தலைமையாசிரியர் டேரின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கிப்சன் நன்றி கூறினார். 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!