Home செய்திகள் தூத்துக்குடி : ஸ்டெர்லைட்டில் உள்ள ஆபத்தான கழிவுகள் 99% சதவீதம் அகற்றப்பட்டுவிட்டது-தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட்டில் உள்ள ஆபத்தான கழிவுகள் 99% சதவீதம் அகற்றப்பட்டுவிட்டது-தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

by mohan

மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆறுவகையான கழிவுகள் மேலாண்மை விதிகள் குறித்த அறிவை மேலும் மேம்படுத்துவதற்காக ஜூலை 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் திறன் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கி இன தூத்துக்குடி தனியார் ஹோட்டலில் வைத்து நடத்த உத்தேசித்ததன் அடிப்படையில் இன்று ஜூலை 2 முதல் நாள் கருத்தரங்கினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்

பின்னா் பேசுகையில் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி “ஸ்டெர்லைட்டில் உள்ள ஆபத்தான கழிவுகள் 99% சதவீதம் அகற்றப்பட்டுவிட்டது, ஜிப்சம் மட்டும் இன்னும் சிறிதளவு உள்ளது, துணை ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, ஆகவே ஆலையில் உள்ள ஆபத்தான கழிவுகளால் ஆபத்து ஏற்படுமோ என பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” எனத் தெரிவித்தார் .இக்கருத்தரங்கில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் V.P. ஜெயசீலன். திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆணையாளர்கள் கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ,உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், இணை இயக்குனர் (சுகாதார பணிகள் ) துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி முதல்வர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) செயற்பொறியாளர் (கட்டிடங்கள் பராமரிப்பு) பொதுப்பணித்துறை, தொழிற்சாலைகளின் ஆய்வாளர், ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அனைத்து உதவி இயக்குனர் நிலை அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், (வட்டார ஊராட்சி) மற்றும் (கிராம ஊராட்சி) உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள் i அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அனைத்து முழு சுகாதார திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!