சுற்றுலாப்பயணிகளை கவரும் காஞ்சிரங்குடி கடற்கரை மகான் பக்கீரப்பா தர்கா

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் எழில் மிகுந்த மன்னார் வளைகுடா கடற்கரையோரம் மகான் பக்கீரப்பா தர்கா அமைந்துள்ளது.திருப்புல்லாணி கிழக்குகடற்கரை சாலையில் இருந்து காஞ்சிரங்குடி கிராமம் மூலம் 3 கி.மீ., தொலைவிற்கு ஏராளமான தென்னந்தோப்புகள் கடந்து சென்றால் அழகிய கடற்கரையின் அருகே மகான் பக்கீரப்பா தர்கா உள்ளது. கடற்கரைப்பகுதியையொட்டி பாறைக்கற்கள்அதிகளவு காணப்படுகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் கீழக்கரை, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். வெள்ளை மணற்பாங்கான பகுதியில் கொண்டை ஊசி வடிவ கடற்கரையின் தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.கடற்கரையில் இருந்து பார்த்தால் வாளைத்தீவு, அப்பாதீவுஆகியவை கண்களுக்கு எளிதாக புலப்படுகிறது.

காஞ்சிரங்குடியை சேர்ந்த கூறியதாவது; நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் காலை, மாலை நேரங்களில் அதிகளவு வருகை தருகின்றனர். சுற்றுலாத்துறையின் சார்பில் பொதுதகவல் விபரம் வைக்க வேண்டும். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களும் மகான் பக்கீரப்பா தர்காவிற்கு வந்துவிட்டு செல்கின்றனர். அக்., மாதத்தில் சந்தனக்கூடு விழா நடக்கும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகத்தினரும், சுற்றுலாத்துறையினரும் செய்து கொடுத்தால் பயனுள்ளதாகவே இருக்கும் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..