Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் கால வரையற்ற போராட்டம் நடத்த TARATDAC மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

மாற்றுத்திறனாளிகள் கால வரையற்ற போராட்டம் நடத்த TARATDAC மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

by mohan

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் மாநில தலைமை அலுவகத்தில் நடைபெற்றது.

மாநில தலைவர் ஜான்சிராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநில பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான துறை செயலாளர் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் விரோத போக்கை கடைபிடிப்பதை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ன் வழிகாட்டுதலின் படி மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், சட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்த மறுப்பதை கண்டித்தும் மேற்கண்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 10.07.19 அன்று மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும், இப்போராட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு குறைவில்லாமல் அணிதிரட்டுவது என்றும், கோரிக்கைகள் நிறைவேறும்வரை எத்தனை நாட்களானாலும் தொடர் போராட்டமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!