உச்சிப்புளி ரயில் நிலையத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆய்வு

ராமநாதபுரம் – மண்டபம் இடையே உச்சிப்புளியில் ரயில் நிலையம் உள்ளது . ராமேஸ்வரம் – மதுரை, ராமேஸ்வரம் – திருச்சி பாசஞ்சர் ரயில்கள் மட்டும் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. உச்சிப்புளி மக்கள் சென்னை, திருப்பதி உள்பட தென் , வட மாநில ரயில்களில் பயணிக்க ராமநாதபுரம் செல்ல நேரிகிறது. கூட்ட நெரிசலில் இடம் கிடைக்காமல் நீண்ட தூரம் நின்றவாறே பயணிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சிரமத்தை தவிர்க்க, ராமேஸ்வரம் – சென்னை (போர்ட் மெயில்), சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் உச்சிப்புளி நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சிப்புளி வர்த்தக சங்கத்தினர், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதன்படி உச்சிப்புளி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள், சென்னை நின்று செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நவாஸ் கனி எம்.பி., ஆய்வு செய்தார். மூடி கிடக்கும் கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க எம்.பி., அறிவுறுத்தினார். நவாஸ் கனி எம்.பி., கூறுகையில், ராமேஸ்வரம் – சென்னை, சென்னை – ராமேஸ்வரம் நகரங்கள் இடையே எக்ஸ்பிரஸ்களை உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வர்த்தக சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்தனர். இது தொடர்பாக வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இவ்விரு ரயில்கள் உச்சிப்புளி நிலையத்தில் நின்று ரயில்வே பொது மேலாளரிடம் முறையிடுவேன், என்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகமது, உச்சிப்புளி வர்த்தக சங்கத் தலைவர் அசாரியா, ஜமாத் நிர்வாகிகள் அப்துல்லா (என் மனங்கொண்டான்), சீனி முகமது (புது நகரம்), வர்த்தக சங்க உறுப்பினர்கள் அமீன், சங்கரலிங்கம், அப்துல் ரவூப், காத்தலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..