பிளஸ் 2 மாணாக்கர் அனைவருக்கும் இலவச லேப் டாப் .அமைச்சர் மணிகண்டன் உறுதி

இராமநாதபுரம் வட்டாரத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவியர் 1,391 பேர் திருப்புல்லாணி வட்டாரத்தில்பிளஸ் 2 மாணவ, மாணவியர் 836 பேருக்கு அரசின் இலவச லேப் டாப்கள், 136 உயர்நிலை, மேல்நிலை பள்ளி களுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும் விழா சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்புல்லாணி சுரேஷ் – சுதா – அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். லேப் பாப், செட் டாப் பாக்ஸ்களை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

அவர் பேசியதாவது: நடப்பு கல்வி ஆண்டு15.5 லட்சம் லேப் டாப் வாங்கப்பட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டில் நீட் தேர்வு சென்ற 64 ஆயிரம் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 , பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர், பிளஸ் 2 , பிளஸ் 1 முடித்த மாணாக்கர், கல்லூரி முதலாம், இரண்டாம் மாணவ, மாணவியர் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் இலவச லேப் டாப் கட்டாயம் வழங்கப்படும். 2020-21 கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்கும் போதே அரசின் இலவச சைக்கிள், லேப் டாப் வழங்கப்படும். லேப் டாப் கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் விஷம பிரசாரத்தை நம்பி மாணவர்கள் போராடுவதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு பேசினார்.பரமக்குடி சட்டமன்ற உ றுப்பினர் நி.சதன் பிரபாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் எல்.பிரேம்,, சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன், தலைமை ஆசிரியர்கள் சண்முகநாதன், பால் மாறன், திருப்புல்லாணி எஸ் எஸ் ஏ நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..