Home செய்திகள் குடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..

குடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தனியார் ஹோட்டலில் குடிபோதையில் வந்த 14 நபர்கள் உணவு பரிமாறிய வேலையாட்கள் இருவரை சரமாரியாக தாக்கியதில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. சிறிய காயத்துடன் மீட்ட ஆலங்குளம் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

மதுபோதையில் ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கும்பலை சினிமா பாணியில் தனி பிரிவு போலீசார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அதிவேகமாக சென்ற காரினை மடக்கி பிடித்தனர். பின்பு இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் 14 பேரும் திருநெல்வேலி பேட்டையினை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்கள் அதிகமாக செல்கின்ற சாலையினை மறித்து சண்டையிட்டதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சாலையின் வழியே அடிக்கடி 108 அவசரஊர்திகள் செல்கின்றன. இந்த சாலையில் தான் இதுபோன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

எனவே ,அவசர ஊர்திகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் நிகழ்வுகளும், சண்டையிடும் நிகழ்வுகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலிருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதும், இப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!