ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக யோக தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும் யோகசனம் நடைபெற்றது…..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் உலக யோக தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும் யோகசனம் நடைபெற்றது 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பு பிராத்தனை செய்தனர்.நாளை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையேட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளியில் மெகா யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல வண்ண ஆடைகள் அணிந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு சூர்ய நமஸ்காரம், வஜ்ராஸசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்தனர்.

தொடர்ந்து குழுவாக சேர்ந்து பிரமிட் அமைத்து போகாசனம் செய்தல், கயறு கட்டி அதில் யோக ஆசனங்களை செய்தனர். இது பார்வையாளர்களுக்கிடையே ஆச்சர்யத்தை ஏற்பத்தியது.பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகளின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து பங்குபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..