தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் அவலநிலை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்களின் அவல நிலை முறியடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் பஞ்சம் குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்

திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம் உள்ளது இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இக்கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை போர்வெல் போட்டும் அன்றாடம் உபயோகிக்கும் உப்புத் தண்ணீர் கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இக்கிராம மக்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் யாரும் செவிசாய்க்காமல் நடந்து கொண்டதால் இக்கிராம மக்கள் சாலையோரங்களில் கிடக்கும் கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இந்தக் கழிவு நீரை எடுப்பதற்கு கூட அரை கிலோ மீட்டர் தூரம் ஊரில் இருந்து நடந்து வந்து தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் நான்கு வழி சாலை அருகே உள்ள ராயபாளையம் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும் இங்கு செல்ல குறைந்தபட்சம் 5 கிலோமீட்டர் தூரம் உள்ளது ஆதலால் ஆண்கள் தினந்தோறும் இருசக்கர வாகனங்களில் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வருவதை முழுநேர வேலையாக பார்த்து வருகின்றனர் மேலும் இக் கிராமத்தில் ஆடு மாடுகள் அதிக அளவில் வளர்ப்பதால் தண்ணீருக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர் அமைச்சர் தொகுதி என்பதால் தொகுதி மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..