தூத்துக்குடி -புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி -2019- நிகழ்ச்சி

தூத்துக்குடி :புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி – 2019 நிகழ்ச்சி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, துவக்கி வைத்தார்.

எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் முயற்சியாகவும், மாணவ/மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களின் படைப்பை உலகறியச் செய்வதற்காகவும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, துவக்கி வைத்தார்,பின்னர் மாணவ, மாணவிகளின் விஞ்ஞான ரீதியான அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்து, அவர்களை பாராட்டி ஊக்குவித்தார்.இந்நிகழ்ச்சியில் புதிய தலைமுறை வார இதழ் ஆசிரியர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சத்திய நேச குமார் வரவேற்றார். சாண்டி குழும நிறுவனத்தலைவர் செல்வராஜ், அதன் துணைத் தலைவர் சாண்டி தலைமை விருந்தினராகவும், புதிய தலைமுறை முதுநிலை மேலாளர் ராஜா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி  பகுதிகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்ட தங்களது படைப்புக்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.இயற்கை சுத்திகரிப்பு, தண்ணீர் மேலாண்மை, குப்பைகளை கையாள்வது, இருச்சக்கர வாகனத்தை குடிபோதையில் இயக்க இயலாதது, அடுக்குமாடி குடியிருப்பு வீட்டு தோட்டத்தில் வளரும். செடிகளை  சென்சார் மூலம் கண்காணித்தல்  உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான  படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர், இது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுஇன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..