செய்தியாளர் மீது தாக்குதல்.தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்  முத்துவேல் தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன்  சம்பந்தமாக செய்தி வெளியிட்டதாக நேற்றிரவு கூலிப்படையினரால் அரிவாளால் தாக்கப்பட்டார், இது தமிழக பத்திரிக்கையாளர்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் இன்று  மனு அளிக்கப்பட்டது, மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா “குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், எனக் கூறினார், மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரனை அடிப்படையில் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்

“ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையாளர்களுக்கு காவல்துறை எப்போதும் பாதுகாப்பளிக்கும், ஆகவே பத்திரிக்கையாளர்கள் இது போன்ற சமயங்களில் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என உறுதியளித்தார்

மாவட்ட கண்காணிப்பாளரின் உறுதி மொழியை ஏற்று பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே செய்திருந்த முடிவை மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..