நாளை (21/06/2019) தவ்ஹீத் ஜமாத் சார்பாக கீழக்கரையில் மழை தொழுகை மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி..

இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் எந்த வருடமும் இல்லாத அளவு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் போதிய மழை இல்லாமையும், பெய்த மழை நீரை சேமிக்காததும்தான். இதற்கு விஞ்ஞானத்தை தாண்டி ஆன்மீக அடிப்படையில் அனைத்து மதத்தினரும் இறைவனிடம்  கையேந்திய வண்ணமும் உள்ளனர்.

இதன் வரிசையில் நாளை (21/07/2019)  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500பிளாட் கிளையின் சார்பில் காலை 7:30 மணிக்கு மழை வேண்டி சிறப்பு தொழுகையும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் மழைக்கு அடிப்படையான விசயம் மரம் நடும் அவசியம். இது  சம்பந்தமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த மழை தொழுகையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…