தூத்துக்குடி – பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் மேரி கில்டா தலைமை தாங்கினார்.

முனைவர் ஜோஸ்பின் ரேணுகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கல்லூரியின் சிறப்புகளையும் வழிகாட்டுதலையும் பற்றி பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார். முதல்வர் சக்தியலட்சுமி அவர்கள் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களையும் பல்கலைகழக தேர்வு முறை அகமதிப்பீடு தேர்வு பற்றி எடுத்துக் கூறினார். ஒவ்வொரு துறையில் இருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு துறைகளுக்கு சென்று துறை தலைவி மற்றும் பேராசிரியர்களை சந்தித்தனர். ஆசிரியர் முதலாமாண்டு மாணவிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கான முனைவர் எஸ் எம்டி மதுரவல்லி (உணவியல் துறை தலைவி) உயர்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டிய கல்வித் திட்டங்களை குறித்தும்,  பெல்லா (கணினித் துறை பேராசிரியர் ) வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு பற்றி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். எமிராயன் ( கணினித் துறை பேராசிரியர் ) சமூகத்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்க (நாட்டு நலப்பணித் திட்டம்) பற்றி கூறினார். டயானா புளோரா (ஆங்கிலத் துறை பேராசிரியர் ) செஞ்சிலுவை சங்கத்தின் செயல்களை விவரித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் முனைவர் எலிசபெத் (வணிகவியல் துறை) ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி விளையாட்டு முக்கியத்துவம் பற்றியும் அதன் வளங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சியுடன் முதலாமாண்டு மாண விகளை மகிழ்வித்தனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..