பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி பாலிமர் தொலைக்காட்சி ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்தியாளர் காவல்துறை ஆய்வாளர் தூண்டுதலின் பேரில் காவல்துறை அதிகாரியும் ரவுடிகளும் இணைந்து கை கோர்த்து ரவுடிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்க செயலாளர் காசிலிங்கம், தலைவர் ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பேசிய செயலாளர் காசிலிங்கம் தமிழகத்தில் தொடர்ந்து செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் காவல் துறையினரால் குறிப்பாக காவல்துறை ஆய்வாளரால் ரவுடிகளால் அரசியல்வாதிகளால் தாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.இது வருத்தத்தையும் மிகுந்த சோகத்தையும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.காவல் துறையே அதிகாரியே செய்தியாளர்களை அடியாட்களை வைத்து வெட்ட சொல்வது அடிக்க விடுவது மிகவும் கண்டிக்கதக்கது என்றார்.மேலும் தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு உடனே வழங்கிட இந்த ஆர்ப்பாட்டம் மூலம் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..