பழுதடைந்த மின் கம்பத்தை சரி செய்ய கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த  பள்ளிப்பட்டிபஞ்சாயத்து கரியாபனஹள்ளி கிராமம் ராஜி கவுண்டர் தந்தை அப்பு கவுண்டர் என்பவர் விவசாய நிலத்தில் கடந்த 6 மாதமாக மின் கம்பம் பழுதடைந்து உடைந்து  விவசாய நிலத்தில் கீழே விழும் நிலையில் உள்ளது .இதனால் விவசாயிகள் உயிருக்கு பயந்து நிலத்தில் விவசாயம் செய்யாமல் இருந்து வருகின்றனர். மின் கம்பம் பழுதடைந்து சாய்ந்து இருக்கும் பகுதியில் கரியாபனஹள்ளி அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப் பள்ளி மாணவ மாணவிகள் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்வதற்கு  அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் ராஜ் கவுண்டர் பாப்பாரப்பட்டி மின்சார நிலையத்தில் பலமுறை நேரில் சென்று பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றச் சொல்லியும் பாப்பாரப்பட்டி மின்சார நிலையம் அலுவலர் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் உள்ளனர். பழுதடைந்து மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…